பு.கஜிந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கை நெறியினை களனி கேபிள் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம் தமிழ் மொழியில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இக்கற்கை நெறியின் பிரதான நோக்கம் மின்னிணைப்பு தொடர்பான தத்துவ விளக்கங்களை வழங்குவது. எனவே மின்னியல் தொழில்நுட்ப துறையில் முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான கற்கைக்காலமாக ஒரு வருடம் எனவும் பகுதி நேர கற்கைநெறியாக மாதத்தின் முதலாவது சனி மற்றும் ஞாயிறு இடம்பெறவுள்ளது.
நேர்முக பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும் எனவும் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி கற்கை நெறியை பயில்வதற்கு பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து. விண்ணப்பம் கோரப்படுகிறது. விண்ணப்பங்கள் 16.10.2023ற்கு முன்னதாகவோ அல்லது அன்றோ கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அல்லது நேரிலும் ஒப்படைக்க முடியும் .
பொருத்தமான விண்ணப்பதாரிகள் தமது சுய விபரக்கோவையை கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். சுயவிபரக்கோவையில் மின்னிணைப்பு தொழிலில் தொழில் செய்த சேவைக்காலம், சேவை விபரம் என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
ஒருங்கிணைப்பாளர் “மின்னிணைப்பு தகைச்சான்றிதழ்” மின் மற்றும் மின்னனு, பொறியியல் பீடம் , அறிவியல் நகர், கிளிநொச்சி. கடித உறையின் மேல் மூலையில் “மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கை நெறி “என தெளிவாக குறிப்பிடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.