சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அ.தி.மு.க.வின் முடிவு. போலியான வெற்றியை பெற தி.மு.க. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு.சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம். இது கட்சி எடுத்த முடிவுதான்.அ.தி.மு.க. ஆட்சியின் போது பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தபோது 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமே என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது கூறினார். தற்போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டாம், 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க முடியவில்லை என்றால் 1000 ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அதுவும் கொடுக்கவில்லை . இதனால் பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கோபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.