பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பேருந்தில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர். குரம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ், காரை மற்றொரு காரில் வந்த கும்பல் இடைமறித்தது. மேலும், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூர தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் என்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியது சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.