(மன்னார் நிருபர்)
(05-07-2021)
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை(5) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
-இதன் போது உரிய திணைக்கள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
-நாளை செவ்வாய்க்கிழமை(6) காலை 8 மணி முதல் 2 ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.