தொடர்ந்து, மிருகங்களும் பிராணிகளும் மனிதனும் தோன்றவே நோய்களும் இயற்கையின் சீற்றங்களும் விரோதங்களும் காரணமாக மனித இனம் அழிந்த சந்தர்ப்பங்களும் இருந்தன.
பின்னர் இந்த பூமியின் மேற்பரப்பில் மனித இனம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நாடுகளும் நகரங்களும் அரசுகளும் நிறுவனங்களும் தோன்றவே மனுக்குலத்தின் நாகரீகம் வளர்ச்சியடைத் தொடங்கியது.
மனிதர்கள் மிருகங்களை வதைப்பதும் கொல்லுவதும், அதே போன்று மிருகங்கள் மனிதர்களைக் கொல்லுவதுமாக மனிதர்களின் அழிவுகள் இடம்பெறத்தொடங்கின.
இதே போன்று ஆட்சி அதிகாரம் பூமியின் இந்த நிலப்பரப்பை தமது உடமைகள் ஆக்குவது தொடர்பான மன எண்ணங்களின் காரணமாக தாக்குதல்களும் யுத்தங்களும் தோன்றவே அங்கும் மக்கள் கொல்லப்படுகின்ற கொடுமை தொடர்ந்தது.
நோய்கள் போன்ற வேறு வடிவங்களிலும் ம்ககள் மோசமாக பாதிக்கப்பட்டதால்ஈ அப்போதும் மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மரணங்களைத் தடுக்க அன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி கைகொடுத்து உதவவிலலை என்பதும் நாம் கற்றறிந்த பல விடயங்களில் அடங்கியுள்ளன.
மனித குலத்தின் வரலாற்றில் போர்களினாலும் நோய்களினாலும் மக்கள் மரணத்தை தழுவியதை எவருமே மறுக்கமாட்டார்கள்.
இதேபோன்று தேசங்கள் உருவாகி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கொள்கைகளும் வகுக்கப்பெற்று உலகெங்கும் பிரிவுகள் அதிகமாகவே உருவாகின.
அரசுகளுக்கு பின்னால் இருந்த அரசியல் கோட்பாடுகள் காரணமாகவும் ஆட்சி மாற்றம் வேண்டி இடம்பெற்ற மோதல்கள் காரணமாகவும் மக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டார்கள்.
விடுதலைப் போராட்டங்கள் என்ற வகைக்குள் அடங்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத அரசுகள் அவற்றை முறியடிப்பதற்காகவும் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் ஆயுதப்; படைகளை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக நடத்தப்பெறுகின்ற ‘அரச பயங்கரவாதம்’ என்ற தாக்குதல் மூலமாகவும் மக்களே பெருமளவில் கொல்லப்படுகின்ற கொடுமை மிக நீண்ட காலமாக இந்த அழகிய பூமியில் இடம்பெற்றுவருகின்றமை அனைவரும் அறிந்ததே!.
இதற்கு மேலாக உலகெங்கும் பல நாடுகளில் அவ்வப்போது நோய்கள் என்ற உயிரியல் ஆயுதங்கள் மூலமாக கொல்லப்பட்ட மக்கள் தொகை எண்ணில் அடங்காதவை.
ஆனால் இவை வெறும் எண்ணிக்கை அல்ல! அவை அனைத்தும் மனித உயிர்களே!
இவ்வாறாக மனித உயிர்களை தன்னால் எடுக்கப்படுவதை, நாளுக்கு நாள் எண்களின் அதிகரிப்பில் எமக்கு காட்டி நிற்கும் ‘கொரோனா’ என்னும் கொடிதான உயிரியல் ஆயுதம் எந்தத் திசையிலிருந்து நீட்டப்படுகின்றது என்று தெரியாமல் நாம் முகக் கவசங்களையும் கையுறைகளைகளையும் மாத்திரமே, எமது ஆயுதங்களாகக் கொண்டு நடமாடுகின்றோம், அல்லது எமது வீடுகளில் தங்கியிருக்கின்றோம்.
இந்தளவிற்கு அறிவார்ந்த மனிதர்களும் விஞ்ஞானிகளும் ஆட்சிகளும், அரசுகளும் மருத்துவத் துறை மேதைகளும் அடங்கியுள்ள இந்த மனிதப் பிரிவிற்குள் நாம் வாழ்ந்தாலும், எம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை எண்ணும் போது எமக்கு வியப்பாகவே உள்ளது.
ஆமாம்! ‘கொரோனாவின் கோரப் பிடிக்குள் சிக்கி மரணத்தைத் தழுவிய மனிதர்களின்; எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு இலட்சத்தைத் தாண்டலாம். ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களும் மருத்துவத்துறை மேதைகளும் எதிர்வரும் வாரங்களில் அல்லது மாதங்களிலில்; கொரோனாவினால் பறிக்கப்படவுள்ள உயிர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கூறமுடியுமாக இருந்தால், ஏன் அவர்களால் இந்த கொடிய நோயின் பிடியிலிருந்து அல்லது மரணத்தின் வாசலில் இருந்து காப்பற்றப்படப் போகின்ற மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாமல் உள்ளது என்றால் எங்கள் முன் எழுந்து நிற்கின்ற கேள்வி இதுதான்.