தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய ‘டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரிய’த்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி, மலேசியாவில் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர்: இந்த அறிவித்தலை
‘கூட்டுறவுக் காவலர்’ & ‘இலக்கியக் காவலர்’ *டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம்*. மற்றும்தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநர்:
டத்தோ பா. சகாதேவன். ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்
இந்தப் போட்டிக்கான நிறைவு நாள் 31-03-2020 என ஏற்கெனவே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கும் முன்னதாகவே ஆட்கொல்லி கிருமியான ‘கோவிட்-19’ தாக்கத்தினால், 18-03-2020 முதல் நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அது இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான கடைசி நாள் ஒத்திவைக்கப்படுவதாக டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உலகெங்கும் வாழும்
தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் தொடர்ந்து தங்களின் படைப்புகளை கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள அறவாரிய முகவரிக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அனுப்பலாம்.
கடந்த ஈராண்டு காலத்தில் வெளியீடு கண்ட நூல்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதால், கனடா உள்ளிட்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு கொள்ளும் முகத்தான், தொடர்ந்து தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். இதன்
தொடர்பில் மேல் விவரத்தை நேரில் அறிய விரும்பினால், இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு. கரு. பன்னீர்செல்வத்துடன்(+6 012-305 6799) தொடர்பு கொள்ளலாம். வாய்ப்பிருந்தால், அலுவலகத்திற்கும்(+6 03-2273 1250) அழைக்கலாம்.
படைப்பாளிகள் தமது படைப்புகளில் ஐந்து பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி:
DATUK B.SAHADEVAN.Managing Director
NATIONAL LAND FINANCE COOPERATIVE SOCIETY
5th International Book Competition
10th Floor – Wisma Tun Sambanthan
Jalan Sulaiman
50768 Kuala Lumpur.MALAYSIA.