கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலகம் படிப்படியாக மீண்டு வருவதாகவே தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவுதலின் ஆபத்தான கட்டமாகக் கருதப்படும் இரண்டாம் அலைத் தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்பாகவே சில நாடுகள் நிலைமைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. அவற்றுள் பல வளர்ச்சியடையாத நாடுகள் என்றால் அது மிகையாகாது.
அந்தந்த நாடுகளின் தடுப்பு நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் பாராட்டி இருக்கின்றன. அரசாங்கம், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட இவ்விடயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் பல தரப்பினராவர். அந்த நாடுகளின் அரசுகளும் பாராட்டுக்குரியவையே
இந்நிலையில் கொரோனா பரவுதல் ஆபத்தான நிலைமைக்குச் சென்று விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்றாக விளங்குகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர் வீதம் இலங்கையில் தற்போது பெருமளவில் குறைந்திருக்கின்றது. ஆனாலும் இவ்விடயத்தில் அலட்சியத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது. தொடர்ந்தும் விழிப்புணர்வு பேணப்பட வேண்டும் என்பதே அங்கு முக்கியம் என்பது அவதானத்துடன் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் உலகின் வல்லரசு என்று தன்னைத் தானே போற்றிக் கொள்ளும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்குதலக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டி இன்னும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது..
ஆனால் அமெரிக்க அதிபர் இதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அங்கு மரணிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் இலக்கங்கள் அல்ல, அவை உயிர்கள் என்பதை அவர் உணர்வதாகத் தெரியவில்லை.
சீனாவையும் சிஎன்என் போன்ற ஊடக நிறுவனங்களைச் சீண்டுவதும் நாகரீகமற்றவராக உரையாடல்களை நடத்துவதுமாகவே அமெரிக்க ஜனாதிபதியின் நாட்கள் கழிகின்றன. ஆனால் கனடா போன்ற நாடுகளின் தலைவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இது நமக்கு பெருமை மட்டுமல்ல, பாதுகாப்பும் ஆகும்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் எங்குமே உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதனால் பல நாடுகள் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை வந்து விடக் கூடாதென்பதற்காகவே தங்கள் நாடுகளில் நாட்டில் தற்போது வேகமாக முன்னெடுத்திருக்கின்றன.