க தி ரோ ட் ட ம் – 05-06-2020 வெள்ளிக்கிழமை
எமது ஒவ்வொரு வார ‘கதிரோட்டம்’ அவ்வாரத்தின் அல்லது அந்த வாரத்தின் புதன் அலலது வியாழக்கிழமைகளில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு விடயத்தைத் தழுவியதாகத் தான் கடந்த 24 வருடங்களாக எழுதப்பட்டு வருகின்றதை., தொடர்ச்சியாக படித்து வருகின்றவர்கள்; அவதானித்திருப்பார்கள்.
ஆனால் இந்த வாரத்தின்; கதிரோட்டத்தைப் படிக்கின்றவர்கள் அல்லது அதன் தலைப்பைப் பார்க்கின்றவர்கள், இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று வரப்போகின்றது, அதனால் தான் இந்த தலைப்பை இவ்வாரத்தின் ‘கதிரோட்டம்’ கொண்டிருக்கின்றது என்று கூட சிந்திக்கலாம்.
ஆனால் அதுவல்ல காரணம், நேற்றைய தினம் இலங்கையின் பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு பதிப்பின் பிரதம ஆசிரியரும் தற்போது கொழும்பிலிருந்து www.voiceoflanka.lk) இணையத்தளத்தை நடத்தி வருபவருமான வீ. தேவராஜ் எழுதிய ஒரு கட்டுரையே எம்மை இவ்வாறான ஒரு விடயத்தை இவ்வாரத்தின் முக்கிய கருப்பொருளாகக் கொள்ளுமாறு தூண்டியது என்பதே உண்மை.
அவர் தனது கட்டுரைக்கு ‘மலையக மக்களின் உடனடித் தேவை- தமக்கான ஒரு தேசியத் தலைவர்’ என்று தலைப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையை எமது முகநூலிலும் என்னும் இணையத்தளத்திலும் படித்த சிலர், இந்த விடயம் வடக்கில் வாழும் தமிழ் மக்களாலும் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும் என்பதை மிக அழுத்தமாக எ|ழுதியிருந்தார்கள்.
பத்திரிகையாளர் தேவராஜ் அவர்கள்; தனது கட்டுரையில் மறைந்த ஆறுமுகம் தொண்டமான் என்னும் மலையக அரசியல்வாதியைப் பற்றி உ யர்வாக எழுதிய பின்னர் அவரது தந்தையார் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களைப் பற்றி குறிப்பிடுகையில் “மலையக மக்களின் அரசியல் தொழிற்சங்க பலமே மலையக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் மறைந்த செளமிய மூர்த்தி தொண்டமான் அவர்களால் வெற்றிகளைக்குவிக்க முடிந்தது.என்றும் தனி ஒருவராக 1977 இல் நாடாளுமன்றம் நுழைந்த அவர் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலரை நாடாளுமன்றம் அழைத்துச் சென்றார்.
என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தான் நாமும் எமது வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தற்போது தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கும் கூற முனைகின்றோம்
.திரு தேவராஜ் மலையக அரசியல்வாதிகளுக்கு கூறியதைத் தான் நாம் எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.
“இனிமேல் தமிழர்களின் தலைமைகளாகிய உங்களுக்கு எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லைஃ தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லும் நீங்கள் அந்த மக்களுக்கு நன்மைகளைச் செய்யாமல் தென்னிலங்கை அரசுகளுக்கு ஆதாரமாக இருந்துவிட்டு வந்தீர்கள்.இனிமேல் அது எமக்குத் தேவையில்லை தமிழர் தாயத்திற்கான ஒரு தேசிய தலைமையை உ|ருவாக்கி அந்தத் தலைமையின் கீழ் எமது குரலாக நில்லுங்கள் அப்போதுதான் இலங்கையின் தேசிய அரசியலிலும் செல்வாக்கு செலுத்தி எமது மக்களின் அவலங்களை நீக்க முடியும்