கதிரோட்டம் 12-06-2020 வெள்ளிக்கிழமை
கொரோனா என்னும் கொடிய நோய்க்கிருமியின் தாக்கம் இரண்டு இலட்சக்கணக்கான உயிர்களை இது வரை பலிகொண்டுள்ளது.
தொற்று நோய்களின் தாக்கம் மனித இனம் தோன்றிய காலந்தொட்டு ஒரு அச்சுறுததலாக இருந்தாலும், அவற்றை மனிதர்கள் ஒரு ஆபத்தான விடயமாகக் கருதவில்லை.. காலத்திற்கு காலம் மக்களை துன்புறுத்துகின்ற ஒரு விடயமாக இதைக் கருதி, சம்பவிக்கின்ற மரணங்களைக் கூட உயிர்களின் இழப்புக்கள் என்று கருதாமல், எண்ணிக்கையை மாத்திரம் கணக்கிட்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கும் செயற்பாடுதான் எப்போதும் தொடர்ந்தது.
ஆனால் இந்தக் கொரோனா எமக்குக் கற்|றுத் தந்தவை பல.
இவ்வாறு தங்களைத் தாக்கும் தொற்|று நோய்கள் தொடர்பாகக்; கூட, தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றே உலக மக்கள் வேறு பல விடயங்களிலும் தாங்கள் பாதிக்கப்படுவதை நன்கு உணராமலும் அதற்கு எதிராக போராடமலும் இருந்துவந்துள்ளார்கள்.
இவ்வாறு உலக மக்கள் அதிக கவனஞ்செலுத்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறிய விடயங்களில் தற்போது உலகெங்கும் மிகவும் ஒரு விசம் போன்று பரவியுள்ள இனம் மற்றும் மதம் சார்ந்த அடக்கு முறைகளும் படுகொலைகளும் இன அழிப்புகளும் அடங்கும்.
இதனால். தொடர்ந்து முதலாளித்துவமும் ஆட்சியாளர்களும் சகபாடிகளாக இணைந்து, அடக்கப்படுகின்ற மக்களின் வாழ்க்கையை இல்லாமற்செய்வதோ அன்றி அவர்களை அவலங்களும் இழப்புக்களுக்கும் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கும் கொடுமை தொடருவதற்கு உதவின
உலக மக்கள் தங்களை மனித குலத்தின் பிரதிநிதிகள் என்று கருதாமல் கூறுகளாக பிரிக்கப்பட்டு இருந்ததை தகுந்த நேரத்தில் கவனிக்கமால் இருந்தபடியால் தான் பிரிவினையை விரும்பியிருந்த முதலாளித்துவமும் ஆட்சி அதிகாரத்தை எப்போது தங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பும் குறிப்பிட்ட பிரிவினரும் தங்கள் விருப்பம் போல ஆண்டாண்டு காலமாக மிகவும் தந்திரமான முறைகளை பிரயோகித்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் கைகளில் தக்கவைத்துக் கொள்வதும், எப்போதும் தங்களுக்கு அடுத்த நிலையிலேயே மக்களும் உழைக்கின்ற தொழிலாளர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவதும் உலகில் எந்த நாட்டிலும் இடம்பெ|றுகின்ற சம்பிரதாயமாக நிலைபெற்றுவிட்டது மிகுந்த கவலைக்குரியது
மனிதர்கள் ஆதிகாலத்தில் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் கூட்டாக உழைத்தார்கள். மனித குலத்தின் இந்த உற்பத்தியானது அவர்களின் தேவைக்கும் அதிகமாக எஞ்சிய போது இந்த எஞ்சிய பகுதி யாருக்கு உரிமையானது என்ற போட்டி உருவாகிறது. இந்தப் போட்டியின் விளைவாக மனித குலம் வர்க்கங்களாகப் பிளவுபட்டது. அதனால் அதிகாரம் என்று தொடங்கி பின்னர் அது ஆட்சி அதிகாரம் என்ற நிலைக்கு மாறியது. ஆட்சியில் அமர்ந்தால் தான் அதிகாரங்களை தங்கள் வைத்துக்கொள்ளலாம் என்ற அவசியம் முதலாளித்துவத்திற்கு உண்டானது.
தொடர்ச்சியாகச் சுரண்டுவதற்காகவும் அதிகாரங்களை தங்கள் வசம் வைத்திருப்பதற்காகவும் அவற்றைத் தமது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பிளவுகளை உருவக்கியது முதலாளித்துவம்.
மக்கள் என்று நிலையிருந்தவர்கள் தம்மிடையே மோதிக்கொள்ளும் வகையில் மதம் இனம் போன்ற பிரிவுகளைக் கவனிக்கும் வகையில் திட்டமிட்ட ஆட்சியாளர்கள்
அதில் வெற்றியும் ஈட்டினார்கள்.
ஆனால் சுரண்டப்பட்ட மக்களோ, தமது முதன்மையான எதிரியான ஏகாதிபத்தியங்கள்ளை மறந்து விட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்வதை நிறைவேற்றினார்கள்.
இவ்வாறாக தற்போது உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் வகையில் இன ரீதியான மத ரீதியான அடக்குமுறைகள் இடம்பறுவதும், அவை அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகள் என்று மற்றவர்கள் அக்கறை கொள்ளாமல் இருப்பதும் பழகிப் போய்விட்டது.
இலங்கையிலும் இந்தியாவிலும் மதம் சார்ந்த இனம் சார்ந்த பிளவுகளை ஆட்சியாளர்களே ஏற்படுத்துவதையும் அதற்காக ஆட்சி அதிகாரம் பயன்படுததப்ப|டுவதையும் நாம் ஷநேரடியாகவே காண்கின்றோம்.
இந்தியாவில் மோடியின் அரசும் இலங்கையின் இராஜபக்சவின் அரசும் எந்தெந்த மதப்பிரிவினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன என்பதும் அதனால் பாதிக்கப்படுகின்ற எந்த இனம் அல்லது மதம் சார்ந்த பிரிவினர் தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை நாம் இங்கு விளக்கமாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறான பல துன்பங்களை அனுபவித்தவர்களே நாங்கள்.
ஒரு இனத்தைச் சேர்நத குழந்தைகளைக் கூட கொதிக்கின்ற திரவங்கள் நிறைந்த தகரக் பீப்பாக்களுக்குள் மற்றைய இனத்தவர்கள் வீசி எறிந்த கொரூரம் இன்னும் தொடர்வதையே அங்கு காண்கின்றோம்.
உலகெங்கும் நாம் அறிந்தவகையில் பல நாடுகளில் எந்தெந்த மதப்பிரிவினர் சிறுபான்மையினராக உள்ளார்களோ, அவர்களை அழித்தொழிப்பதில் ஆட்சியாளர்களுக்கு முக்கிய பங்கு இருந்து வந்திருக்கின்றது.
பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் படுகொலை செய்யப்படுவதையும் மியன்மாரின் சிறுபான்மை இஸ்லாமியர்கள் அழிக்கப்படுவதையும் கண்ட நாம் தற்போது சீனாவிலும் இஸ்லாமியர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதை செய்திகள் வாயிலாக அறிகின்றோம்
சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் குழுக்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமானவர்கள், ஆட்சியில் உள்ளவர்களால் அடக்கு முறைக்கு உள்ளாகின்றார்கள் என்பதற்கு போதிய ஆதாரம் அங்கு கிடைத்துள்ளது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சென் குவாங்குவோ உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமானவர் என்றும் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கசிந்த சீன அரசின் ஆவணங்களை வைத்து த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் எழுதிய கட்டுரைகள் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன
இதே போன்று இலங்கையில் கோத்தாபாயவின் ஜனாதிபதி செயலணி என்னும் பெயரில், ஆட்சி அதிகாரமும் இராணுவத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளும் தயாராக உள்ளதாக அறிகின்றோம்.
அங்கு தமிழ் மற்றும் இஸ்லாமியர்களை மதம் மற்றும் இனம் சார்ந்து அடையாளங்களை அழிக்கும் |முயற்சிகள் இடம்பெறுவதை எவ்வாறு சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதையும் நடைபெறப்போகின்ற பொதுத் தேரதலில் பாராளுமன்றம் செல்லப்போகின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.