கதிரோட்டம் 03-07-2020 வெள்ளிக்கிழமை
கொரோனா தொற்று விடயத்தில் உலகம் கவனயீனமாக செயற்படுகின்;றதா? என்ற கேள்வியை கனடாவின் பல்கலைக் கழகமொன்றி மருத்துவ பீடத்தின் தலைவர் எழுப்பியிருப்பது அனைவரினதும் கவனத்தை ஈர்க்க வேண்;டிய ஒன்றாகும்
இந்த விடயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியது மிக முக்கியமானதாகும். உலக சுகாதார அமைப்பு என்;பது கூட இந்த விடயத்தில் முன்னையதைப் போன்று இலலாமல் தனது செயற்பாடுகளைக் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவிலும் பல மாகாணங்களில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் மோசமடைவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
சுகாதாரமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தின் தேவை உணரப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. பொதுப் போக்குவரத்தை முன்னெடுப்பவர்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தத் தவறுமிடத்து கடுமையான நடவடிக்கை எடுக்க தவறக் கூடாது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் பயணக் கட்டுப்பாட்டு விதிகள் பேணப்படுவது திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது
கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசின் சிரத்தையான முயற்சிகள் வெற்றியளித்தாலும் மக்கள் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை என்றும் அந்த மருத்துவப் பீடத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் மத்திய மற்றும் அனைத்து மாகாணங்களினதும் நகர சபைகளினதும் மருத்துவ அதிகாரிகள் தங்களால் முயன்று எடுத்த முயற்சிகள் மக்கள் கவனயீனமாக உள்ளதால் அவை வெற்றியளிக்கவில்லை என்றும் அநியாயமாக எமது கனடிய மக்கள் தங்கள் அன்பான முதியவர்களை இழந்து வருகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே உலகம் எப்படி தன்னை பாதுகாத்துக்;கொள்ளப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க முடியாது என்றும் அவசரமும் அவசியமுமான செயற்பாடுகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை நாமும் எமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.