இறுதிவரை எந்த அங்கீகாரமும் இல்லாமலே வாழ்ந்து இறந்து போன ஒரு மாமனிதர் இளசைமணியன். எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தின் பாதுகாவலர். பாரதிக்காகத் தன்பார்வையை இழந்தவர். சரித்திரச் சமவெளியில் ஒரு சாமானியரின் வரலாறு புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக விதைக்கப்படுகிறது இந்தப்பதிவு.
பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 13.7.2020) அதிகாலை காலமானார்..அவருக்கு வயது 78.
மகாகவி பாரதியார்பிறந்தஊரானஎட்டயபுரத்தைச்சேர்ந்தவர்இளசைமணியன். மு.ராமசுப்புரமணியன்என்றஇயற்பெயர்கொண்டஇளசைமணியன், 1942-ம் ஆண்டுபிறந்தவர். இளைசைமணியன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பாரதிஆய்வாளர் என பன்முகம் கொண்டவர். பாரதிஆய்வு, இலக்கியத்திறனாய்வு, வரலாற்றுஆய்வு, கதை,கவிதை, மொழிபெயர்ப்புதமிழ்இலக்கிய உலகுக்குபலபங்களிப்புகளை செய்துள்ளார். எட்டயபுரம் பாரதிநினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர்.
கல்கத்தா, ஆவணக்காப்பகத்துக்கு சென்றுபாரதியின், “இந்தியா” இதழில் உள்ள அரியதகவல்களைத் தொகுத்து, பாரதிதரிசனம் என்றநூலைகொண்டு வந்தவர்.இந் தநூலின் வருகைக்குப் பிறகு தான்தமிழ்சமூகத்தில் பாரதியைப் பற்றிய இன்னொரு முகம், ஆய்வுக்களத்துக்குள் அடியெடுத்து வைத்தது.
இவரது”பாரதிதரிசனம்”உருவாகுவதற்காகஇவர்மேற்கொண்டமுயற்சிகளை அருகிருந்து பார்த்தவன் நான். தமிழ் உலகத்திற்கு அதுவரையில் கிடைக்காதிருந்த பாரதியின்பல் வேறு கட்டுரைகள் கல்கத்தா தேசியநூலகத்தில் இருப்பதாய்அறிந்து, அதைவெளிக் கொணரும் முயற்சியில் பல ஆண்டுகளை இளசைமணியன்செலவிட்டார். கல்கத்தா நூலகத்திற்குச் சென்று அங்கிருந்த பாரதியின் கட்டுரைகளை பல்வேறு பத்திரிக்கைகளிலிருந்து திரட்டி, அவற்றை மைக்ரோபில்ம்களில் பதிவு செய்துஎட்டயபுரத்திற்கு கொண்டுவந்தார். அந்தபிலிம்களை ஓட்டிப்பார்க்கும் கருவிகள்வாங்குவதற்கு காசில்லாமல், சின்னக் குழந்தைகள் செய்து விளையாடுவதைப் போல அட்டைப் பெட்டியில்லென்ஸை இணைத்து ஒளி மூலம் சுவரில்பிலிம்களைப் பெரிதுபடுத்தி,தன் நண்பர்கள்உதவியோடு ஒவ்வொருஎழுத்தாகப் படித்துகாகிதங்களில்பதிவுசெய்தார். இந்தமுயற்சியில்அவரது பார்வையும் இல்லாமற் போனது பார்வையை இழந்த பிறகு தான் “பாரதிதரிசனம்”இரண்டு பாகங்களாகவெளிவந்தது.அதற்காக அவருக்குகிடைத்தராயல்ட்டி வெறும் 850 ரூபாய் தான். அவர்கண்ணுக்குப் பணம் தெரியவில்லை. பாரதிதான் தெரிந்தான். இன்று நமக்கு கிடைத்திருக்கின்ற பலஇலக்கியங்களுக்குப்பின்னால் இப்படிப்பட்ட தன்னலமற்றதேடல்களும் தனிவரலாறுகளாகப்பொதிந்திருக்கின்றன.
பாரதிதரிசனத்தைத் தொடர்ந்து, பாரதியாரின் இந்தியா,பென்ஷன் சிறுகதைத்தொகுப்பு, எட்டயபுரம் வரலாறு உள்ளிட்ட நூல்களை இளசைமணியன் எழுதியுள்ளார்.
இளசைமணியன் மனைவி கஸ்தூரி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு முத்துக்குமாரபாரதி என்ற மகன் உள்ளார்.
புகழ்மிக்கமாக்சிய தமிழறிஞர்தொ.மு.சிரகுநாதன் தன்னுடையநூல்கள்அனைத்தையும், ஒரு அறக்கட்டளை யாக்கிபாது காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். வாழ்நாள் முழுவதும் இலக்கியசேவைபுரிந்தவர்.
வாழ்நாள் முழுவதும் இலக்கிய போராளியாகவும் ,ஒரு பொதுவுடமைகாரனாகவும், முழுமையான வாழ்வை நிறைவு செய்ததோழர் இளசைமணியன் அவர்களுக்கு “வீரவணக்கம்”செலுத்துவது நமது கடமை.
எட்டயபுரத்தில் இளசைமணியனுக்கு சிலை எழுப்பவேண்டும். அது இளசை மணியனுக்குக் கொடுக்கின்ற மரியாதை மட்டும் அல்ல. பாரதிக்கு, பாரதியின் எழுத்துக்களுக்கு கொடுக்கின்ற மரியாதை. அரசு அதற்கான பணிகளைச் செய்யவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
டாக்டர்வே. சங்கரநாராயணன்