எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது 5,236 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரக் கட்டத்தில் 163 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறுவதுடன் தொடர்பானவை என்று தேசிய தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,011 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதுதவிர 4,225 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது