கதிரோட்டம் 21-08-2020 வெள்ளிக்கிழமை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர சபையின் அங்கத்தவருமான சட்டத்தரணி மணிவண்ணனுக்கு அவர் சார்ந்த கட்சியின் தலைவர் மற்றும் மத்திய குழு ஆகியவற்றிலிருந்து தரப்பட்ட நெருக்குவாரங்கள் தற்போது அந்த கட்சியை ‘தெருவிற்கு’ கொண்டு வந்த விட்டிருக் வேண்டும்.
இந்த தர்க்கம் தொடர்பாக மணிவண்ணன் அவர்களது ஆதரவாளர்கள் தீவிரமாக செயற்பட்டு அவருக்கு ஆதரவாக இருந்தாலும் அவரது கட்சி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதே யாழ்ப்பாணத்திலிரு;நது எமக்கு கிடைக்கும் செய்திகளிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது எனவே அவரது நாவிலிருந்து வந்த ‘ஏமாற்றுக்காரர்கள்’ என்ற வார்த்தைக்கான தேடலில் நாம் இப்போது இருந்தே ஈடுபட வேண்டும். உடனேயே செயலில் இறங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
நடந்து முடிந்த தேர்தலில் சட்டத்தரணி மணி;வண்ணன் அவர்களுக்கு கட்சிக்குள்ளேயே அவர் சார்ந்த நல்லூர் தொகுதியில் அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. கூட்டமைப்பிலும் பார்க்க தமிழ் காங்கிரஸ் கட்சிக்கே அதிக வாக்குகள் கிடைத்திருந்தன என்பதை தேர்தல் முடிவுகள் எமக்குக் காட்டி நின்றன.
ஆனால் தற்போது அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளமைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க, யாழ்ப்பாணத்தின் கல் விச் சமூகம் முன்வர வேண்டும் என்பதையே நாம் ஒரு வேண்டுகோளாக விடுக்கின்றோம்.
நேற்யை தினம் யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் நடைபெற்ற ஒரு வைபவத்தில் அவர் உரையாற்றும் போது அவர் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னைய தலைவர்கள் |நேர்மையாக அரசியல் செய்தார்கள். ஆனால் இன்றுள்ள எமது தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக ஏமாற்றுவேலை செய்யக்கூடிய நிலையிலேயே உள்ளனர்.
மக்களின் உரிமை, தேசியம், கொள்கைக்காக போராடுபவர்கள் அதே கொள்கைக்காக போராடி எம்மை விட்டு பிரிந்தவர்களையும் நினைவு கூரவேண்டும். அவ்வாறு செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிகடனில் ஒன்றாகும். இன்றைய நினைவு நாளில் எத்தனை பேர் கலந்து கொண்டு மாமனிதரை நினைவு கூறுகின்றோம்?” என்றார்.
அவரது கருத்துக்களை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் நிச்சயமாக!