நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 24 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 789 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 141 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது