இலங்கையில் புகையிலைச் சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
புகையிலை நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்கக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது.
ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது.
இதனை இலங்கை மக்களும் வெற்றிலை பாக்குடன் இணைத்து உண்பதுடன் புகைத்தலுக்கும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.