கல்கிஸ்ஸ கடலுக்கு நீராடச் சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை தெஹிவளை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கண்டி-எரோ தோட்டத்தில் வசிக்கும் 18 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் கல்கிஸ்ஸ கடலில் நீராடுவதற்காக 5 இளைஞர்களுடன் இவர் சென்றிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், நீரில் மூழ்கி மாயமான மற்றைய இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்