முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அங்கு சென்றிருந்தனர்.
அதனடிப்படையில் அவரிடம் சுமார் 9 மணிநேர வாக்குமூலம் பெற்ற அவர்கள் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் இன்று (26) காலை அங்கு சென்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடந்த 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தனக்கு குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாக முடியாது எனவும் கொழும்பில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது