கதிரோட்டம் 28-08-2020 வெள்ளிக்கிழமை
இலங்கைப் பாராளுமன்றம் மீண்டும் எம் மக்களின் நீதிக்காய் குரல் எழுப்பும் தமிழ் பேசும் அங்கத்தவர்கள் சிலரால் பரபரப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வளவு நாட்களும் சுமந்திரனின் பின்னால் நின்று மௌனத்தைக் கடைப்பிடித்த ஸ்ரீதரனும் ‘உரத்துப்” பேசத் தொடங்கியுள்ளார். இந்;த ‘சத்தம்’ எத்தனை நாட்களுக்கு ஈடு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் சி. வுp. விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களின் உரைகள் தென்னிலங்கை இனவாத அரசியல்வாதிகளுக்கு ‘தீனி’ போட்டது போல அமைந்து விட்டது. முன்னைய இனவாத அரசியல்வாதிகளான சிறில் மெத்தியு போன்றவர்களை மிஞ்சும் வகையில் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றார்கள்.
மேலும், நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன் பல கேள்விகளை நேரடியாகவே எழுப்பியுள்ளார் தமிழர்களின் வரலாறு, கலாசார அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் அவர் எழுப்பியுள்ள கேள்விகள்,இனிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள பல விவாதங்களில் நிறையவே தர்க்கங்களைக் கொண்டுவரலாம். அப்போது, அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றுபட்டு எதிர்வாதங்களை முறியடிக்க வேண்டும் என்றே எமது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மேலும் இன்றை கதிரோட்டம் அமைந்துள்ள பக்கத்தில் அருகே காணப்படும் செய்தியை படித்துப் பார்க்கத் தவறவேண்டாம்.
இம்மானுவேல் பாதிரி மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரின் பெயர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்தவர்கள் என கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த இரண்டு பேரும் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆதரவானவர்கள் போன்று இருந்து விட்டு பின்னர் சுமந்திரன் |போன்றவர்களின் ஆலோசனைகளின் பேரில் ரணில் அரசோடு ஒத்துழைத்து பல சலுகைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் என கொழும்பில் உள்ள பத்திரிகையாளர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த இருவருக்கும் நெருக்கமானவர்கள் சிலர் கனடாவிலும் உள்ளார்கள் என்பதும், இவர்கள் அனைவரும் மைத்திரி- ரணில் ஆட்சியில் இருந்தபோது கொழும்புக்கு பயணம் செய்கின்றபோது அங்கு அரசாங்கத்தின் சார்பில் மறைமுகமான வரவேற்பைப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவர் மட்டுமல்ல இந்தப் பாதிரியின் அணியில் பல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அடங்கியிருந்தார்கள். மைத்திரி- ரணில் ஆட்சியின் போது, அவர்கள் ராஜபக்சாக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிதர்சனமாக்குவதற்கு இந்த தமிழர்களும் துணை நின்றார்கள்.
கனடா, அவுஸ்த்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் பலர் இலங்கைக்கு அழைக்கப்பெற்று, நன்கு உபசரிக்கப்பெற்று பல திட்டங்களுக்கு துணைபோனார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கை அரசுக்கு காலக்கெடு பெற்றுக்கொடுப்பது, சர்வதேச நீதி மன்றம் தேவையற்றது போன்ற விடயங்களுக்கு சாதகமாக தமிழர் தரப்பை நகர்த்திச் செல்வதற்கு திரை மறைவில் நடைபெற்ற பல கூட்டங்களில் இவர்கள் அனைவருமே பங்காற்றினார்கள். இதன் விளைவுதான் தமிழர்களின் அனைத்துப் போராட்டங்களும் பின் தள்ளப்பட்டு தற்போது புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு மந்த நிலை காணப்படுவதற்குரிய காரணம் என்று நாம் கருதுகின்றோம்.
எனவே எமது புலம் பெயர் தமிழ் மக்கள் ஒதுங்கிச் சென்றுவிடாது, தொடர்ந்து மக்கள் அமைப்புக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும. உதாரணமாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவில் பிரம்ரன் மாநகரில் ஆரம்பமாகவுள்ள ஒட்டாவா மாநகர் நோக்கிய நீண்ட நடைப் பயணத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கவேண்டும். முன்னின்று செயற்படும் அனைத்துத் தரப்பினருக்கும் உற்சாகம் தரும் வகையில் கனடா வாழ் தமிழ் மக்கள் தொகையில் சிறு அளவினராவது அருகில் சென்று உற்சாகமளித்து ஆதரவு வழங்க வேண்டும். இதுவே எமது வேண்டுகோள்.
இம்மானுவேல் பாதிரி சுரேன் சுரேந்திரன் ஆகியோரின் பெயர்களை, கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கும்படி மங்கள சமரவீர தன்னிடம் கூறியதாக இராணுவ அதிகாரி தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டிணன் கேர்ணல் ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர செயற்பட்டபோதே தனக்கு இவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இம்மானுவேல் பாதிரி மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரின் பெயர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்தவர்கள் என கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த இரண்டு பேரும் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆதரவானவர்கள் போன்று இருந்து விட்டு பின்னர் சுமந்திரன் |போன்றவர்களின் ஆலோசனைகளின் பேரில் ரணில் அரசோடு ஒத்துழைத்து பல சலுகைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் என கொழும்பில் உள்ள பத்திரிகையாளர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த இருவருக்கும் நெருக்கமானவர்கள் சிலர் கனடாவிலும் உள்ளார்கள் என்பதும், இவர்கள் அனைவரும் மைத்திரி- ரணில் ஆட்சியில் இருந்தபோது கொழும்புக்கு பயணம் செய்கின்றபோது அங்கு அரசாங்கத்தின் சார்பில் மறைமுகமான வரவேற்பைப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பாதியாரும் சுரேனும் தமது நண்பர்கள் எனவும் தாம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட காலப்பகுதியில் அவர்களுடன் நல்லுறவை பேணி இருந்ததாகவும் மங்கள சமரவீர தன்னிடம் கூறியதாக ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த குறித்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஷம்மி குமாரரத்ன தெரிவித்துள்ளார்.