சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களின் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
இதன்படி மன்னாரில் அன்றைய தினம் மன்னார் பிரதேச செயலகம் முன்னால் காலை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது