சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, ஞாயிற்றுக்கிழமையன்று 30 மு; திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வைத்து மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கான மகஜரினை அருந்தந்தையர்கள் சின்னத்துரை லீயோ ஆம்சொங், ம.ரெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அண்ரனிற்ரா மாற்கு ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? சர்வதேச விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? என கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட் குறித்த போராட்டத்திற்கு ஆரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை மற்றொரு பேரணி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பித்து, ஐ.நா பிரதிநிதியின் அலுவலகம் வரை இடம்பெற்றது