வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி இடம்பெற்ற போராட்டத்தில் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். கிளிநொச்சியில் இன்றைய திடம் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதன்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட்டுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.