கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் லங்கா நியுஸ் வெப் இணையத்தள செய்தி ஆசிரியரான சதுரங்க டி சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி லங்கா நியூஸ்வெப் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியரான இவர் மிகவும் துணிச்சலுடன் விமர்சனங்களை முன்வைப்பதில் முக்கியமானவர் என்று கருதப்படுகின்ற ஒருவர் என்பதும் அவர் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் பயன்படுத்திய கணனியும் குற்றப் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
நீதிமன்றத்தை குறைத்து மதிப்பீடு செய்து செய்திகளை பிரசுரித்தமைக்காக அவர் தடுத்த வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது