புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்
“அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.
அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து வாக்குமூலம் பதிவுசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுகின்றார்.
புலிகளின் பிரிவினைவாத முகாமையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரின் அறிவிப்புக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.