மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கி பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது மின்னல் தாக்கியதால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்
இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.