தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஊடக சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்இ கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரம் ஆகியோர் யாழில் நடைபெறவுள்ள கட்சியின் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.
அந் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இவ்வண்ணம்
சுரேந்திரன் குருசுவாமி (0777318387)
தேசிய அமைப்பாளர்
தமிழீழ விடுதலை இயக்கம்.
தியாகராஜா நிரோஷ் (0776569959)
மாவட்ட பொறுப்பாளர் – யாழ்ப்பாண மாவட்டம்
தமிழீழ விடுதலை இயக்கம்.