நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால் எம்.ஏ.சுமந்திரனுடன் மறைமுக முரண்பாடு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சீ.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன் ஆகியோரும் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இரவு விருந்துபசார நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பங்கேற்றுள்ளார்.
இதே வேளை கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு ய்யப்பட்டுள்ளது.இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில்
ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்