யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது தாய் உட்பட சகோதரன் மற்றும் அயலவர்களின் 24வது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை 10 மணியளவில் ஈகைச் சுடரேற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் உட்பட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியல் வாதிகள் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.