யாழ் மாவட்டத்தில் சுமார் 3027.85 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டாமல் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 23 850. 72 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு 16775.50 ஏக்கராகவும் 2015 இல் 7075.22 ஏக்கராகவும் 2019 இல் 4047 .37 ஏக்கராகவும் குறைவடைந்துள்ளது.
குறித்த சுமார் 3027.85 ஏக்கராக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில்
• நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 21.91 ஏக்கராகவும்
• வேலணை பிரதேச செயலர் பிரிவில் 54.59 ஏக்கராகவும்
• ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 2.37 ஏக்கராகவும்
• காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 32.50 ஏக்கராகவும்
• யாழ்ப்பாணத்தில் ஒரு ஏக்கராகவும்
• நல்லூரில் 4.85 ஏக்கராகவும்
• சண்டிலிப்பாயில் 26.53 ஏக்கராகவும்
• சங்கானையில் 23.68 ஏக்கராகவும்
• உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 0.71 ஏக்கராகவும்
• தெல்லிப்பழையில் 2480.15 ஏக்கராகவும்
• கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 9.61 ஏக்கராகவும்
• சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 70.88 ஏக்கராகவும்
• கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 4.49 ஏக்கராகவும்
• பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 9.39 ஏக்கராகவும்
• மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 285.20 ஆகவும் காணப்படுகிறது.
இவற்றில்
• இலங்கை இராணுவம் 2054 .25 ஏக்கரையும்
• கடற்படை 274.57 ஏக்கரையும்
• விமானப்படை 646.50 ஏக்கரையும்
• பொலிஸ் 52.53 ஏக்கரையும்
கையகப்படுத்தி வைத்துள்ளதாக அறியக் கிடைத்தது.
– டுடே ஜவ்னா