புதிதாக அரச நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் முதல் குழுவினர் தமக்குரிய இராணுவ முகாமுக்கு சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்றையதினம் குறித்த பட்டதாரி பயிலுநர்கள் திருகோணமலையில் உள்ள மங்கு பிரிட்ஜ் இராணுவ முகாமில் ஆரம்பகட்ட தலைமைத்துவ பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.