யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டில், ஸ்ரீதரன் பவானி (40) என்ற பெண் படுகாயமடைந்துள்ளார்.
முகங்களை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
உடல் முழுவதும் வெட்டுக் காயத்திற்கு உள்ளான பெண், உயிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.