யாழ்ப்பாண குடாநாட்டின் சனத்தொகை வீழ்ச்சியடைந்து செல்வதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சனத்தொகை வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகள் வருடாந்தம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த வீழ்ச்சிப்போக்கு நிலைமை தெரியவந்துள்ளது.
இதன்படி 2017 இல் யாழ்.மாவட்டத்தில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 709 மக்கள் வாழ்ந்தனர். 2018 ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 15 ஆயிரத்து 493 மக்களே வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 2019-12-31 இன் கணக்கெடுப்பின் பிரகாரமும் 2017 ஆம் ஆண்டின மக்கள் தொகையை எட்டமுடியவில்லை. பிரதேச செயலக ரீதியில் கணக்கிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2019 இல் 6 இலட்சத்து 16 ஆயிரத்து 462 பேரே வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்,நல்லூர் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் மக்கள் தொகையிலேயே அதிக வீழ்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.