நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமே பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக 20 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவ்வழக்கு இன்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மணிவண்ணன் ,மற்றும்சுகாசும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்
தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றமை , புலிகளை புத்துருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றமை , கொரோனா காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க கூடாது என்ற சில காரணங்களை பொலிஸர் சமர்ப்பணமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் கடந்த காலங்களிலும் இவ்வாறான தடையுத்தரவு கோரப்பட்ட போது, நிகழ்வினை சுமூகமாக நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது