முல்லைத்தீவு மாவட்டம் கொல்லவிளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புத்தகப் பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் கொல்லவிளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வரும் கடந்தகாலயுத்த நிலைமை களினால் மற்றும் வேறு காரணங்களினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புத்தக பைகள் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகளை தந்துதவுமாறு பாடசாலை அதிபரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 50,000 பெறுமதியில் 31 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.