முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட 24 பொதுமக்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் இணைப்பாளர் ச. ரூபன் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.