ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் தேசிய கட்சிகள் என தம்மை கூறிக்கொள்ளும் கட்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்து கொண்டன
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னணியின் தலைவர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரனிற்கு நேரடியாக அழைப்பு விட மாவை சேனாதிராசா தொலைபேசியில் அழைத்த போதும், அவர்கள் பதிலளிக்கவில்லை. பின்னர், கடிதம் மூலம் அவர்களிற்கு அறிவிக்கப்பட்டது.
கோட்டாபாய அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் போராட்ட அறிவிப்புக்கள் இன்று விடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னணி அதை தவிர்த்துள்ளது