முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்க முடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது
முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகர் இந்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் AR/681/2020 வழக்கிலக்கத்தில் வழக்குத்தாக்கல் செய்ததற்கமைய, நீதிமன்றம் குறித்த தடைஉத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நேற்று, ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார்.