முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வானது சற்று முன்னர் மாந்தை கிழக்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது
தமிழர்களின் பாரம்பரியங்களை பறைசாற்றிக இந்த கலாச்சார பண்பாட்டு பெரு விழாவானது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தற்போது பண்பாட்டு பேரணியானது மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது
மயிலாட்டம் கோலாட்டம் கும்மி காவடி உள்ளிட்ட பல்வேறு கலை அம்சங்கள் தாங்கி கலாச்சார பவனி இடம்பெறுகின்றது
பேரணி பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன
இன்றைய இந்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் உள்ளிட்ட பல்வேறு அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
கிராம மக்கள் பிரதேச செயலக ஊழியர்கள் கலை ஆர்வலர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்


















































