தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்து இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வருகை தந்தை அவருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.