இன்று (28) தமிழர் தாயக பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றாக முடங்கியுள்ளது .
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, இன்று வடக்கு கிழக்கில் பொது முடக்கத்திற்கு 10 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன .
இந்த அழைப்பை ஏற்று வடக்கு, கிழக்கில் இன்று முழுமையான கதவடைப்பு இடம்பெருக்கின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதான ஆசரியர் சங்கம் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதால், கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.