கதிரோட்டம் 25-09-2020
பூமியில் அமைந்துள்ள ஒவ்வொரு நாட்டிலும் கோவிட்-19 நோயின் தாக்கம் ஏற்படுத்திய பாதிப்புக்கள மேலும் தொடர்ந்த வண்;ணம் உள்ளன. இவ்வாறான நிலையில் கனடா தேசத்திலும் இந்த நோயின் பாதிப்பு பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் இவ்;வருடத்திற்கான சிம்மாசன உரை தலைநகரான ஒட்டாவா மாநகரில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மிகவும் நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெற்ற ஒரு அரசியல் பாராம்பரியத்தின் வெளிப்பாடாக விளங்கும் இந்த ‘உரை’ இடம்பெற்றிருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரே ‘குஷி’ சிறுபான்மை அரசாங்கமாக விளங்;கும் லிபரல் கட்சியையும் அதன் தலைவரான பிரதமரையும் விமர்சனங்களின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் பாங்கு கடந்த இரண்டு நாட்களாக எங்கும் சிதறிய வண்ணம் பாய்ந்து செல்கின்றன. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் கடந்த சில மாதங்களாக பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததும், பல்வேறு விமர்சனங்;களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக வேண்டியும் இருந்தார்.
தற்போதைய சிம்மாசன உரைக்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறும் போது அது பற்றிய விவாதங்களும் இடம்பெறவுள்ளன என்பதும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.
முக்கியமாக, சிறுபான்மை அரசாக விளங்கும் ஆளும் கட்சிக்கு ஏதாவது ஒரு எதிர்க்கட்சி தனது ஆதரவை வழங்கினாலேயே ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தன்னையும் அமைச்சரவையையும் தக்கவைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியும் கியுபெக் மாநிலத்திற்கே சொந்தமான புளக் கியுபெக்குவா கட்சியும் இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று ஏற்கெனவே தெரிவித்து விட்டார்கள். மூன்றாவது எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியானது லிபரல் கட்சியை தேவையான அளவிற்கு விமர்சனங்களின் மூலம் கண்டித்து வந்தாலும், சிம்மாசன உரை தொடர்பான வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்று கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் அவர்கள் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவே இல்லை.
கோவிட்- 19 காரணமாக தற்போதைய லிபரல் அரசு கனடியர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் வழங்கிய உதவிகள் மற்றும் சலுகைகள் ஆகியன அரசு மீதான ஒரு ஈர்ப்பைக் ஏற்படுத்தினாலும் நிதி தொடர்பான பல குற்றச்சாட்டுக்கள், பிரதமர் மற்றும் அவருடைய குடும்பம் சார்ந்த உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டதனால் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை சிறிது தளர்ந்த நிலையிலேயே நாட்டு மக்கள் உள்ளார்கள் என்பதும் உண்மை.
அதே வேளை, முன்னைய நிதி அமைச்சரின் சில நிதி தொடர்பான ஈடுபாடு மற்றும் பல செயற்பாடுகள் அவரை இராஜினாமா வரை கொண்டு சென்றாலும் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களின் அரசாங்கத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகவே தெரிகின்றது.
எவ்வாறாயினும் தற்போதை அரசு இந்த கோவிட்-19 தொடர்பான காலப்பகுதியில் இருந்தால் நாட்டுக்கு நன்மை பயக்;கும் என்று ஒரு பகுதி கனேடியர்களோ அன்றி புதிய ஜனநாயகக் கட்சியோ எண்ணினால் சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும், ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையில இந்த ஆட்சி தொடரும் வாய்ப்பு சில வேளைகளில் கிட்டலாம்.
புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு கிட்டி, லிபரல் அரசு தனது ஆட்சியைத் தொடர்ந்தால் தொடர்ந்தும் மற்றைய இரண்டு எதிர்க்கட்சிகளின் நெருக்குவாரம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்தி;ருந்தே பார்க்க வேண்டும்.