கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 04 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பின் பயனாளியும் மாற்றுத்திறனாளியுமான சிறாட்டி குளத்தைச் சேர்ந்த நிலந்த சரஸ்வதி அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு ரூபா 40,000 பெறுமதியில் சிறிய கடை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்ட விழிப்புலனற்றோர் அமைப்பினால் கடந்த கால யுத்த நிலைமை களினால் பாதிக்கப்பட்ட தமது பயனாளிகளான 3 மாற்றுத்திறனாளி குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
கிளிநொச்சி இயக்கச்சியை சேர்ந்த
நித்தியானந்தம் வசந்தினி அவர்களுக்கு ரூபா 50,000 பெறுமதியில் கோழிக்கூடு ஒன்றும், 31 கோழிகள் அவற்றுக்கான தீவணங்கள் மற்றும் நீர் வைக்கும் கலன் என்பவும்.
முழாங்காவில் கிராமத்தைச் சேர்ந்த பாலமயூரன் நவாந்ந்தினி அவர்களுக்கு ரூபா 50,000 பெறுமதியான நல்லிண மாடு ஒன்றும்.
செல்லத்துரை மோகணரானி அவர்களுக்கு ரூபா 40,000 பெறுமதியில் 20 கோழிகளும் அதற்கான கோழிக்கூடு என்பன குறித்த மாற்றுத்திறனாளி குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கான நிதி அன்பளிப்பினை புலம்பெயர் உறவுகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.