உதயன் பிரத்தியேகக் கானொளி
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தியாளர்களையும் பொதுமக்களையும் இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.
அரசின் தடையையும் மீறி முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கூட்டு உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்குபெற்ற பொதுமக்களையும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் படம் பிடிக்கத் தொடங்கியதும் பிரச்சினை எழுந்தது.