யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்களும் எல்லை தாண்டி வந்து தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுடைய நெருக்கமான தொடர்புகளை பேணிய 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 70 பேர் வீடுகளில் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து எவரும் கடல் மார்க்கம் ஊடாக நாட்டுக்குள் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்தமையினால் யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 09 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோளர்ப் படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன், இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.