யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து ஒன்று மாங்குளம் பகுதியில் பாலத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த போது சாரதிக்கு ஏற்பட்ட தீடிர் சுகயீனம் காரணமாக மாங்குளம் பகுதியிலுள்ள பாலத்தின் மீது மோதியுள்ளது. இருப்பினதும் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதோடு குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.