கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் அந்தப் பெண், நேற்றைய தினம் புங்குடுதீவுக்குத் திரும்பியிலிருந்தார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காகப் பெறப்பட்டடன.
அதில் நேற்று வீடு திரும்பியவருக்கு தொற்று உள்ளமை இன்று மாலை உறுதி செய்யப்பட்டது.
அவரை கொழும்பு தேசிய தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர்.