தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறும் தினங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று முற்பகல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை என்றும் திட்டமிட்ட தினத்தில் பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.