கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 15 பேருக்கு இன்று 5ம் திகதி சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நீர்கொழும்பு தலைவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதன்படி நீர்கொழும்பு வைத்தியசாலையில் 7 பேருக்கும் இராகமை வைத்தியசாலை 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 3,490 ஆகும்