யாழ்ப்பாண குடாநாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம், இன்று யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்டச் செயலாளர் க.மகேசன், இதனால், பொதுமக்களும், அதிகாரிகளும் அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.