கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பேச்சாளர் விஜித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது பொலிஸ் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் யக்கல பகுதியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது