மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன், தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை இன்று கிடைக்கும் என்று, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கண்டாவளையில் இரண்டு குடும்பங்களும் வட்டக்கச்சியில் ஒரு குடும்பமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழககத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 18 மாணவர்களும், வெளிக்கண்டல் இராணுவ முகாமில் மூன்று இராணுவத்தினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அரச அதிபர் மேலும் கூறியுள்ளார்.
இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன என்றும் அதன் முடிவுகள் இன்று தெரியவரும் எனவும், பொது மக்கள் வீணாக அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை பேணி வருமுன் காக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்